லண்டனில் நள்ளிரவில் பயங்கரம்! மூன்று பெண்கள் உட்பட 4 பேரை சுத்தியலால் தாக்கிய நபர்!
லண்டனில் இருவேறு இடங்களில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பொது மக்கள் மீது சுத்தியலால் தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சந்தேக நபர் முதலில் ரீஜென்ட் தெருவில் 20 மற்றும் 30 வயதிற்குட்பட்ட இரண்டு பெண்களை சுத்தியலால் தாக்கினார்.
வெள்ளிக்கிழமை இரவு 11.54 மணியளவில் நடந்த வன்முறை சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து தகவல் கிடைத்ததை அடுத்து பொலிஸார் அவ்விடத்துக்கு விரைந்தனர்.
ஆனால், முதல் தாக்குதலுக்குப் பிறகு, அந்த நபர் கிளாஸ்ஹவுஸ் தெருவை (Glasshouse) நோக்கி ஓடி ஒரு மதுக்கடைக்குள் நுழைந்தார், அங்கு அவர் 40 வயதில் ஒரு பெண்ணையும் 50 வயதில் ஒரு ஆணையும் தனது சுத்தியலால் அடித்தார்.
அங்கிருந்த பவுன்சர் அந்த நபரை தடுத்து நிறுத்தி, பொலிஸ் வந்ததும் அவர்களிடம் ஒப்படைத்தனர்.
சந்தேக நபர் 38 வயதுடைய ஒரு ஆன் என்பதைத் தவிர பொலிஸார் வேறு எந்த தகவலையும் இதுவரை வெளியிடவில்லை. அவர் கைது செய்யப்பட்டு மத்திய லண்டன் காவல் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட நான்கு பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதை லண்டன் பெருநகர பொலிஸ் உறுதிப்படுத்தியது. ஆனால் அவர்களில் யாருக்கும் உயிருக்கு ஆபத்தான காயங்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.