ஸ்பைடர் மேன் முகமூடியோடு பிரித்தானிய கலைஞரின் சிலையை தாக்கிய நபர்! அதிர்ச்சியூட்டும் காரணம்
பிரித்தானியாவில் பிபிசி பிராட்காஸ்டிங் ஹவுஸின் முன்புறத்திலிருந்த கலைஞரின் சிலையை, ஸ்பைடர் மேன் முகமூடியோடு வந்த நபர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிலை அவமதிப்பு
பிரித்தானியாவின் மத்திய லண்டனில் உள்ள பிபிசியின் பிராட்காஸ்டிங் ஹவுஸின் முன்புறத்தில், சிலை பழுதுபார்க்கும் பணியின் போது, தற்போது சிலையைச் சுற்றியுள்ள சாரக்கட்டு மீது ஒருவர் ஏறியதாக, அதிகாலையில் பொலிஸார் அழைக்கப்பட்டனர்.
@daily mirror
அப்போது ஸ்பைடர் மேன் முகமூடி அணிந்த ஒருவர், அங்கிருந்த ஒரு கலைஞரின் சிலையை சுத்தியல் மற்றும் உளி கொண்டு தாக்கினார், ஏனென்றால் சிலையாக வடிக்கப்பட்டுள்ள அந்த கலைஞர் தனது இரண்டு மகள்கள் மற்றும் சகோதரிகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த சிலை ஷேக்ஸ்பியரின் தி டெம்பெஸ்டில் இருந்து, ப்ரோஸ்பெரோ மற்றும் ஏரியல் போன்றவர்களை உருவத்தை சித்தரிக்கிறது, அதிலுள்ள எரிக் கில் என்ற அந்த கலைஞன் தனது இரண்டு மகள்கள், சகோதரிகள் மற்றும் வளர்ப்பு நாயை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக புரிந்து கொள்ளப்படுகிறது.
@daily mirror
இந்நிலையில் சூப்பர் ஹீரோ ஸ்பைடர் மேன் உடையணிந்த அந்த நபர், இந்த வார தொடக்கத்தில் பழுதுபார்க்கும் பணியை அறிவித்த பிபிசியை விமர்சிக்கும் வகையில், பேனரையும் கட்டியிருந்தார்.
இந்நிலையில் மதியம் 12.30 மணி வரை அந்த நபரும், அதிகாரிகளும் சம்பவ இடத்தில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கலாச்சார சீரமைப்பு
இந்த சிற்பம் 1932 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பு மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது, மேலும் சிலையை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு மத்தியில் கடந்த ஆண்டு தாக்கப்பட்டது.
இதுகுறித்து மெட் பொலிஸ் செய்தி தொடர்பாளர் கூறியதாவது’அந்த நபர் ஒரு சிற்பத்தை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. உயரம் உட்பட சம்பவத்தின் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு அந்த நபரின் உயிரை பாதுகாக்க வேண்டி எந்த வித தடுப்பு நட வடிக்கையும் எடுக்க முடியவில்லை’ என கூறியுள்ளனர்.
@daily mirror
கடந்த மே 16ஆம் திகதி, BBC கட்டிடத்தின் வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு, பழுதுபார்க்கும் பணி அனைத்து செலவினங்களுக்கும் நிறுவனத்தின் காப்பீட்டின் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து நிபுணத்துவம் வாய்ந்த சிற்ப வேலை செய்பவர்கள், வடமேற்கு பிரான்சில் வெட்டியெடுக்கப்பட்ட ஒரு வகை சுண்ணாம்புக் கற்களான கேன் கற்களால் செதுக்கப்பட்ட சிலையை மீண்டும் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.