காலால் கேரம் விளையாடி தெறிக்கவிட்ட மாற்றுத்திறனாளி! இணையத்தில் வைரலாகும் வீடியோ
காலால் கேரம் விளையாடும் மாற்றுத்திறனாளியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பயங்கர வைரலாக பரவி வருகிறது.
கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர் தனது நண்பர்களுடன் கேரம் விளையாடும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அவரது பெயர் ஹர்ஷத் கோதாங்கர் என்பது மட்டும் தெரிய வந்துள்ளது. அதில் அந்த மாற்றுத்திறனாளி தனது காலால் கேரம் விளையாடும் காட்சி அனைவரையும் கவர்ந்துவிட்டது.
The difference between impossible & POSSIBLE lies in one’s determination.
— Sachin Tendulkar (@sachin_rt) July 26, 2021
Here's Harshad Gothankar who chose i-m-POSSIBLE as his motto.
Love his motivation to find ways to make things possible, something that we can all learn from him. #MondayMotivation pic.twitter.com/Cw6kPP4uUz
வீடியோவை பகிர்ந்த சச்சின் சாத்தியமற்றதற்கும் சாத்தியத்துக்குமான வித்தியாசம் ஒருவரது உறுதிப்பாட்டைப் பொறுத்தது என்றும் இதிலிருந்து நமது வாழ்க்கைக்கு தேவையான பாடங்களை கற்றுக்கொள்ளலாம் என்று உணர்ச்சி பொங்க பதிவு செய்துள்ளார்.
இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பகிர்ந்து மாற்றுத்திறனாளியை பாராட்டி வருகின்றனர்.