ரஷ்யாவை புறக்கணிப்பதற்காக மற்றொரு நாட்டுடன் கைகோர்த்துள்ள பிரான்ஸ்
எரிபொருளுக்காக ரஷ்யாவை சார்ந்திருப்பதைக் குறைப்பதற்காக, பிரான்ஸ் ஐக்கிய அரபு அமீரகத்துடன் கைகோர்த்துள்ளது.
திங்கட்கிழமை, பிரான்ஸ் ஆற்றல் ஜாம்பவானான TotalEnergies நிறுவனம், மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் எண்ணெய் நிறுவனமான ADNOC நிறுவனம் ஆகிய நிறுவனங்களுக்கு இடையில், ஆற்றல் தொடர்பில் ஒப்பந்தம் ஒன்றில் இரு நாடுகளின் தலைவர்களும் கையெழுத்திட்டார்கள்.
File: Benoit Tessier/Reuters
ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபரான Sheikh Mohamed bin Zayed Al-Nahyan பாரீஸ் வந்திருந்த நிலையில், இந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கிடையிலும் கையெழுத்தாகியுள்ளது.
இதற்கிடையில், மனித உரிமை அமைப்புகள், ஆற்றலுக்கான மாற்று ஏற்பாடுகளைத் தேடும் மேக்ரானின் முயற்சிகள் பிரான்சுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையில் நெருக்கமான பிணைப்பை உருவாக்கியுள்ளன என்று கூறியுள்ள நிலையில், அதே நேரத்தில், அமீரகத்துக்கு பாரீஸ் அளிக்கும் வரவேற்பு, அந்நாட்டின் மனித உரிமை மீறல்களை அங்கீகரித்தது போல் ஆகிவிடக்கூடாது என எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
File: Thomas Padilla/Pool via Reuters