மகள் காணாமல் போனதால் உயிரை மாய்த்துக்கொண்ட தந்தை... பின் நடத்த எதிர்பாராத திருப்பம்
அமெரிக்காவில், இளம்பெண்ணொருவர் காணாமல் போக, அவரைத் தேடியும் அவர் கிடைக்காததால் தன் உயிரை மாய்த்துக்கொண்டார் அந்தப் பெண்ணின் தந்தை.
ஆனால், அந்தப் பெண் பத்திரமாக இருக்கிறார் என்பது பின்னர் தெரியவந்தது!
மகள் காணாமல் போனதால் உயிரை மாய்த்துக்கொண்ட தந்தை
Mauiஐச் சேர்ந்த ஹன்னா (Hannah Kobayashi, 30), கடந்த மாத துவகத்தில் ஹவாயிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸுக்கு விமானத்தில் சென்றார்.
அவர் நவம்பர் மாதம் 8ஆம் திகதி நியூயார்க் விமானம் ஒன்றைப் பிடிக்கவேண்டியதாக இருந்தது.
ஆனால், அதற்குப் பிறகு அவரிடமிருந்து அவரது குடும்பத்துக்கு எந்த தகவலும் இல்லை.
மகள் காணாமல் போனதாக அவர்கள் பொலிசாருக்கு தகவலளித்தார்கள்.
நவம்பர் மாதம் 12ஆம் திகதி, ஹன்னா மெக்சிகோவுக்குள் நுழையும் CCTV காட்சிகள் கிடைத்தன.
ஹன்னாவின் தந்தையான ரயான் (Ryan), லாஸ் ஏஞ்சஸுக்குச் சென்று குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் மகளைத் தேடும் முயற்சியில் இறங்கினார்.
மகள் கிடைக்காத நிலையில், நவம்பார் மாத இறுதியில் தன் உயிரை மாய்த்துக்கொண்டார் ரயான். லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்துக்கு அருகில் ஒரு கார் பார்க்கிங் ஒன்றில் அவரது உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், புதன்கிழமை ஹன்னா பத்திரமாக இருப்பது தெரியவந்துள்ளதாக அவரது குடும்பத்தினரும், லாஸ் ஏஞ்சல்ஸ் பொலிசாரும் தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |