100 ஆண்டுகளுக்கு பின் ராஜயோகம்! தீபாவளி நாளில் தேடிவந்த அதிர்ஷ்டம்
100 ஆண்டுகளுக்கு பின்னர் தீபாவளி தினத்தில் ஹன்ஸ் யோகம் உண்டாவதால் சில ராசிகளின் வாழ்வில் பாரிய மாற்றம் ஏற்படுகிறது.
இன்றைய நாளில் குரு கடக ராசியில் பயணம் செய்து ஹன்ஸ் மஹாபுருஷ ராஜயோகத்தை உணடாக்குகிறது.
குருவின் இந்த மாற்றம் சில ராசிகளின் வாழ்வில் மாற்றத்தை உண்டாக்குகிறது, இது குறித்து பார்க்கலாம்.
கடகம்
ஹன்ஸ் யோகத்தால் காதல் வாழ்வில் மாற்றம் உண்டாகும், காதல் செய்யும் கடக ராசியினர் தாராளமாக உங்கள் வீட்டில் அனுமதி கேட்கலாம், நிச்சயம் பச்சை கொடி தான். திருமணமான நபர்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை கழிப்பார்கள், பொருளாதார சூழல் மேம்படும், தடைபட்ட காரியங்கள் கைகூடும். வாழ்வில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
சிம்மம்
ஹன்ஸ் யோகத்தால் அதிகாரம் மிக்க பதவிகள் தேடிவரும், புதிய தொழிலை தொடங்குவீர்கள், நீண்ட நாள் திட்டங்களை செயல்படுத்துவீர்கள். சமூக அந்தஸ்து உயரும், உடன் பிறந்தவர்களுடன் இணக்கான சூழல் உருவாகும், பெற்றோர்கள் தொழில் வளர்ச்சிக்கு உதவுவார்கள்.
துலாம்
ஹன்ஸ் ராஜயோகத்தால் தொழில் வாழ்க்கையில் பாரிய முன்னேற்றம் ஏற்படும், பணியிடத்தில் பொறுப்புகள் வந்து சேரும். தலைமை பொறுப்பில் அமரும் வாய்ப்பு வரலாம். உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள், பணத்தை சேமித்து செலவுகளை குறைப்பீர்கள், வாழ்வின் லட்சியங்களை நிறைவேற்றும் நாள்.
விருச்சிகம்
ஹன்ஸ் யோகத்தால் நல்ல செய்தி வந்து சேரும் நாளாகும், வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளலாம், சுயமாக தொழில் தொடங்க திட்டமிடுபவர்களுக்கு ஏற்ற காலகட்டம் இது. உங்கள் பயணங்கள் வெற்றியில் முடியும், குடும்பத்தினருடன் சந்தோஷமாக நேரத்தை செலவிடுவீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு வாழ்வில் வெற்றியை கொண்டு வரும் யோகமாக ஹன்ஸ் யோகம் பார்க்கப்படுகிறது, அலுவலகத்தில் முன்னேற்றம் உண்டு, பதவி உயர்வை எதிர்பார்க்கலாம். பணம் வந்து சேரும், மணவாழ்வில் சந்தோஷம் உண்டு, திருமணத்திற்கு வரன் தேடும் நபர்களுக்கு ஏற்ற வாழ்க்கை துணை அமையும்.