தோழியின் கணவரை அபகரித்தேனா? ஹன்சிகா மோத்வானி அளித்த விளக்கம்
தனது திருமணம் குறித்த வீடியோவில் தோழியின் கணவரை அபகரிக்கவில்லை என்று ஹன்சிகா மோத்வானி விளக்கம் அளித்துள்ளார்.
ஹன்சிகாவின் கணவர்
பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி தனது தொழில் நண்பரான சோஹேலை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர் தனது திருமணத்தை அறிவித்தபோது தோழியின் கணவரை ஹன்சிகா திருடிவிட்டார் என சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டது.
ஏனெனில் ரிங்கியின் முன்னாள் கணவர் தான் சோஹேல். அவர்களின் திருமணத்திற்கு ஹன்சிகா சென்றதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தங்கள் திருமணம் குறித்த வீடியோவில் பல விடயங்கள் குறித்து ஹன்சிகா-சோஹேல் பேசியுள்ளார்.
விளக்கம் அளித்த ஹன்சிகா
அதில் ஹன்சிகா கூறுகையில், 'அந்த நேரத்தில் நான் இந்த நபரை சந்தித்தது என் தவறு அல்ல. எனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒரு பொது நபராக மக்கள் விரல்களை சுட்டிக்காட்டுவது மற்றும் மக்களை மோசமாக உணர வைப்பது மிகவும் எளிதானது. அதற்கு நான் விலை கொடுக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.
அதேபோல், தனது மனைவியை பிரிந்ததற்கு காரணமாக ஹன்சிகாவை கூறுவது முற்றிலும் ஆதாரமற்றது. திருமணத்தில் அவரை பார்த்ததால் ஏற்பட்ட திடீர் குழப்பத்தால் தான் இவ்வாறு கேலி செய்யப்பட்டது என்று நினைக்கிறேன் என சோஹேல் தெரிவித்துள்ளார்.