சுவிட்சர்லாந்திலும் ஹன்டா வைரஸ்: அதிகாரிகள் தெரிவித்துள்ள தகவல்
சொகுசுக் கப்பல் ஒன்றில் வைரஸ் தொற்று ஒன்று பரவியதில் மூன்று பேர் பலியான நிலையில், அந்தக் கப்பலில் பயணித்த சுவிஸ் நாட்டவர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்திலும் ஹன்டா வைரஸ்
அர்ஜெண்டினாவிலிருந்து Cape Verde என்னுமிடத்துக்குப் பயணித்துக்கொண்டிருந்த MV Hondius என்னும் சொகுசுக் கப்பலில் பயணித்த சுற்றுலாப்பயணிகள் சிலருக்கு ஹன்டா வைரஸ் என்னும் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் மூன்று பேர் பலியாகிவிட்டதால் இந்த விடயம் பல நாடுகளில் பரபரப்பை உருவாக்கிவருகிறது.
இந்நிலையில், அந்தக் கப்பலில் பயணித்த சுவிஸ் நாட்டவர் ஒருவருக்கு சமீபத்தில் உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு ஹன்டா வைரஸ் தொற்று இருப்பதை உறுதி செய்துள்ளார்கள்.
அவர் சூரிக் பல்கலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருடைய மனைவி தன்னைத்தான் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
இதற்கிடையில், இப்போதைக்கு ஹன்டா வைரஸால் பொதுமக்களுக்கு ஆபத்து எதுவும் இல்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |