இடது கையில் விளையாடி ஒற்றை கையில் ஷாட் அடித்த வலது கை பேட்ஸ்பேன்! வைரல் வீடியோ
ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்டில் பிரபல வீரர் ஹனுமா விஹாரி இடது கையில் பேட்டிங் செய்ததோடு ஒரு கையால் ஷாட்களை அடித்த வீடியோ வைரலாகியுள்ளது.
ரஞ்சிக் கோப்பை
ரஞ்சிக் கோப்பை கால் இறுதிப் போட்டியில் ஆந்திரா - மத்திய பிரதேசம் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது. இதில் டாஸ் வென்ற மத்திய பிரதேசம் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
ஆந்திரா அணியின் கேப்டன் விஹாரி 37 பந்துகளில் 16 ரன்கள் எடுத்திருந்த போது ஆவேஷ் கான் பந்து வீச்சில் அவருக்கு இடது கை மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் பாதியிலேயே களத்தில் இருந்து வெளியேறினார். ஒரு கட்டத்தில் ஆந்திரா அணி 353 ரன்கள் 9 விக்கெட்டுகளை இழந்தது.
Do it for the team. Do it for the bunch.
— Hanuma vihari (@Hanumavihari) February 1, 2023
Never give up!!
Thank you everyone for your wishes. Means a lot!! pic.twitter.com/sFPbHxKpnZ
இடது கையில் விளையாடிய வலது கை வீரர்
இந்த நிலையில்தான் விஹாரி மீண்டும் பேட்டிங் செய்ய களமிறங்கினார். உடைந்த மணிக்கட்டைப் பாதுகாக்க இடது கை பேட்ஸ்மேனாக பேட்டிங் செய்தார். அவரது இடது கை முழுவதுமாக டேப் செய்யப்பட்ட நிலையில் ஒரு கையை மட்டுமே உபயோகித்து விளையாடினார்.
விஹாரி கிட்டத்தட்ட பத்து ஓவர்களில் 26 ரன்கள் எடுத்தார். இதையடுத்து ஆந்திரா 9 விக்கெட்டுக்கு 379 ரன்களுக்கு முன்னேறியது.