அயோத்தி ராமர் கோயிலுக்கு கோடிகளில் நன்கொடை வழங்கிய படக்குழு
அயோத்தியில் பால ராமர் கோயிலுக்கு, ஹனுமான் படக்குழு பல கோடியை நன்கொடையாக வாரி வழங்கியுள்ளது.
நன்கொடை வழங்கிய ஹனுமான் படக்குழு
அயோத்தி ராமர் கோயிலின் குடமுழுக்கு மற்றும் திறப்பு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
இவ்விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், இந்தியாவின் விவிஐபிக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
அயோத்தியில் ராமர் கோயிலானது முழுவதுமாக பக்தர்களிடம் இருந்து நன்கொடை பெறப்பட்டு அதன் மூலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இதற்காக பக்தர்களும், பிரபலங்களும் நன்கொடைகளை வழங்கியுள்ளனர். இந்நிலையில், பொங்கலுக்கு வெளியான ஹனுமான் படக்குழுவும் நன்கொடையை வாரி வழங்கி உள்ளது.
இப்படம், பான் இந்தியா அளவில் மாபெரும் வரவேற்பு கிடைத்ததால், 10 நாட்களிலே ரூ.200 கோடிக்கு மேல் வசூலானது. இதையடுத்து, படக்குழு 53 லட்சத்து 28 ஆயிரத்து 211 டிக்கெட் விற்பனை ஆனதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதில் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.5 வீதம் மொத்தமாக ரூ.2 கோடியே 66 லட்சத்து 41 ஆயிரத்து 55 ரூபாய் அயோத்தி ராமர் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கி உள்ளதாக அறிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |