ஒரு வாரம் நீங்கள் சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா?
பொதுவாக பல நோய்களுக்கு காரணமாக இருக்கும் ஒரு முக்கிய பொருள் தான் சர்க்கரை.
ஏனெனில் சர்க்கரை வெற்று கலோரிகளால் நிரம்பியுள்ளது மட்டுமல்லாமல் முகப்பரு, தாமதமான செரிமானம், இரத்த சர்க்கரை, வீக்கம் மற்றும் இரத்த அழுத்தம் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.
அதனால் தான் மருத்தவர்கள் அதிக சர்க்கரையை உட்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்துகின்றனர்.
அதிலும் உங்கள் உணவில் இருந்து ஒரு வாரம் முழுவதும் வெள்ளை சர்க்கரையை முற்றிலுமாக நீக்கினால் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுவதாக சொல்லப்படுகின்றது.
அந்தவகையில் அந்த மாற்றங்கள் என்னென்ன என்பதை பாரப்போம்.
- உணவில் இருந்து சர்க்கரையை குறைப்பது இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை கணிசமாக மேம்படுத்தும்.
- செரிமானத்தை எளிதாகவும் வேகமாகவும் செய்ய, ஒரு வாரத்திற்கு சர்க்கரையை நிறுத்தி விட்டு, மாற்றத்தை நீங்களே கவனித்துப் பாருங்கள்.
- சர்க்கரை உட்கொள்ளலை நிறுத்திய ஒரு வாரத்திற்குள் உள் வீக்கத்தைக் குறைக்கத் தொடங்கும்.
- குளிர் பானங்கள், டீ அல்லது காபி போன்ற சர்க்கரை நிறைந்த பானங்களை தூங்கும் போது உட்கொள்ளும் பழக்கத்தை தவிருங்கள். ஏனெனில் இருந்தால் இவற்றால் தூக்கம் தடைபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
- உங்கள் உணவில் இருந்து சர்க்கரையை குறைக்க வேண்டும். குறிப்பாக வெள்ளை சர்க்கரை மட்டுமல்ல, குளிர் பானங்கள், சாக்லேட்கள், கேக்குகள், பிஸ்கட்கள் மற்றும் ஐஸ்கிரீம்கள் போன்ற சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை உள்ள உணவுகளையும் நீங்கள் நிறுத்த வேண்டும்.
- சர்க்கரையை உட்கொள்வது உடனடி சர்க்கரை வேகத்தை கொடுக்கலாம், ஆனால் பின்னர் உங்கள் ஆற்றலை இரண்டு மடங்கு வேகத்தில் குறைக்கும். எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.