3 மாதம் கேரட் ஜூஸில் சிறிது வேப்பிலை சாற்றினை கலந்து குடிங்க.. பெறும் நன்மைகள் ஏராளம்!
உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் உணவுப் பொருட்களில் கேரட் மற்றும் வேப்பிலைக்கு தனி இடமே உண்டு என்ற சொல்லாம்.
இவற்றில் சக்தி வாய்ந்த ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கிய பலன்களும் நிறைந்துள்ளது.
இந்த இரண்டு பொருட்களையும் கொண்டு ஜூஸ் தயாரித்துக் குடித்து வந்தால், அதில் உள்ள மருத்துவ குணங்களால் பல்வேறு உடல்நல பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
தற்போது இந்த ஜூஸை எப்படி தயாரிக்கலாம் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.
ஜூஸ் தயாரிக்கும் முறை
2 டேபிள் ஸ்பூன் வேப்பிலை சாற்றினை, 4 டேபிள் ஸ்பூன் கேரட் ஜுஸ் உடன் சேர்த்து கலந்து, தினமும் காலையில் உணவு உட்கொண்ட பின் குடிக்க வேண்டும்.
இப்படி மூன்று மாதத்திற்கு குடித்து வந்தால், உடலின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதை நன்கு உணர முடியும்.
நன்மைகள்
- குடலில் உள்ள டாக்ஸின்களை சுத்தம் செய்து வெளியேற்றி, வயிற்று பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.
- சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை ஊக்குவித்து, சரும செல்களை புத்துணர்ச்சி அடையச் செய்து, சருமத்தை பொலிவாக்கும்.
- இது கண் பார்வை நரம்புகளை வலிமைப்படுத்தி, கண் பார்வையை மேம்படுத்தும்.
- இது உடலில் உள்ள குறிப்பிட்ட நோய்களை உண்டாக்கும் கிருமிகளை அழித்து, காய்ச்சல் மற்றும் இதர தொற்றுகளில் இருந்து தடுக்கும்.
- செரிமானத்தை மேம்படுத்தி, பசியின்மையைப் போக்கும்.
- இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் குறைத்து, கொலஸ்ட்ரால் பிரச்சனையை கட்டுக்குள் வைக்கும்.
- கல்லீரலை சுத்தம் செய்து, கல்லீரலின் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்ளும்.