வருங்கால தலைவர் உதயநிதி ஸ்டாலின்... பிறந்த நாள் வாழ்த்து கூறிய காயத்ரி ரகுராம்
தமிழக விளையாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, நடிகை காயத்ரி ரகுராம் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்
திமுக இளைஞரணிச் செயலாளரும், தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் 46 -வது பிறந்தநாளை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.

அதை தவிர அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் முதல் அனைவரும் உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். அந்த வகையில், நடிகை காயத்ரி ரகுராம் உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
வருங்கால தலைவர்
இந்நிலையில் நடிகை காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "உங்களை சின்னவர் என்று அழைக்கலாம், ஆனால் தேவைப்படுபவர்களுக்கு உதவும் பெரிய மனசும் திறமையும் உங்களிடம் உள்ளது. பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

உங்கள் எதிர்கால வெற்றிக்காக, வலிமைக்காக நான் பிரார்த்திக்கிறேன். விளையாட்டு துறை அமைச்சர், வழிநடத்தும் வருங்கால தலைவர் உதயநிதி ஸ்டாலின்" என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உங்களை சின்னவர் என்று அழைக்கலாம், ஆனால் தேவைப்படுபவர்களுக்கு உதவும் பெரிய மனசும் திறமையும் உங்களிடம் உள்ளது. பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் எதிர்கால வெற்றிக்காக, வலிமைக்காக நான் பிரார்த்திக்கிறேன். மாண்புமிகு விளையாட்டு துறை அமைச்சர், வழிநடத்தும் வருங்கால தலைவர் .@Udhaystalin… pic.twitter.com/NKuMZT6ELK
— Gayathri Raguramm ?? (@Gayatri_Raguram) November 26, 2023
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |