உயர் அதிகாரிகள் கொடுத்த மோசமான தொல்லைகளால் உயிரை மாய்த்து கொண்ட 28 வயதான லேடி சிங்கம்! அதிர்ச்சி பின்னணி
இந்தியாவில் உயர் அதிகாரிகள் கொடுத்த மோசமான தொல்லைகளால் லேடி சிங்கம் என்று அழைக்கப்பட்ட வனத்துறை அதிகாரி தீபாலி சவான் தற்கொலை செய்த நிலையில் முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஸ்டிர மாநிலம் அமரவாதி மாவட்டத்திலுள்ள மெல்காத் புலிகள் வனச்சரணாலயத்தில் வன அதிகாரியாக பணி புரிந்து வந்தவர் தீபாலி சவான். இவரை , வனத்துறையின் லேடி சிங்கம் என்று மகாராஸ்டிரத்தில் அழைப்பார்கள்.
உள்ளுர் ரவுடிகளுக்கும் , அரசியல்வாதிகளுக்கும் பயப்படாமல் வனத்தை காக்கும் பணியில் புலி போல தீபாலி செயல்பட்டு வந்தார்.
இதே வனச்சரணாலயத்தில் துணை பீல்டு ஆபிசராக இருந்த வினோத் சிவக்குமார் என்பவர் தீபாலிக்கு பல வகைகளில் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
அடிக்கடி மது குடித்து விட்டு கெட்ட வார்த்தைகளால் தீபாலியை திட்டுவதோடு அவரின் பணியை செய்ய விடாமல் மனதளவில் டார்ச்சர் செய்துள்ளார். பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தல் அளித்துள்ளார்.
தீபாலியின் ஒரு மாத சம்பளத்தையும் நிறுத்தி வைத்துள்ளார். இந்த நிலையில், கடந்த மார்ச் 25 ஆம் திகதி அமராவாதியில் தான் வசித்து வந்த வனத்துறை குடியிருப்பிலேயே தீபாலி தன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மிகவும் தைரியமான வனத்துறை அதிகாரியாக பார்க்கப்பட்ட 28 வயதேயான இளம் வனத்துறை அதிகாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மகாராஸ்டிராவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தீபாலி எழுதிய தற்கொலை கடிதத்தில், தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை பட்டியலிட்டிருந்தார். தன்னை மாதத்துக்கு ஒரு முறை கூட குடும்பத்தாரை சந்திக்க விட்டதில்லை.
இரவு நேரத்தில் தன்னை தனியாக சந்திக்க வருமாறு சிவக்குமார் அழைத்தார் என்று குற்றம் சாட்டியிருந்தார். தீபாலியின் தற்கொலையை தொடர்ந்து, வினோத் சிவக்குமார் கைது செய்யப்பட்டார்.
மெல்காத் புலிகள் காப்பகத்தின் பீல்டு ஆபிசர் சீனிவாசரெட்டியும் திடீரென்று தலைமறைவாகவே உள்ள நிலையில் அவரை கைது செய்