கணவருடைய மகன் கொடுக்கும் தொல்லை: நடுக்கத்துடன் வாழும் பிரித்தானிய பெண்...
மாற்றாந்தாய், பிள்ளைகளை கொடுமைப்படுத்துவது போன்ற காட்சிகளை திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால், தன் மாற்றாந்தாயையே ஒருவர் படுத்தும் கொடுமை தாங்காமல், தான் நடுக்கத்துடனேயே வாழ்ந்துவருவதாகத் தெரிவித்துள்ளார் பிரித்தானியப் பெண் ஒருவர்.
மாற்றுத்திறனாளியாகிய பெண்
இங்கிலாந்திலுள்ள Nottinghamshireஇல் தன் கணவர் வீட்டில் வாழ்ந்துவருகிறார் சாரா (புனைபெயர்). கடந்த ஆறு ஆண்டுகளாக, தன் கணவருடைய முதல் மனைவியின் மகனான 17 வயது இளைஞரால் தான் தாங்கொணா துயரம் அனுபவித்து வருவதாகத் தெரிவிக்கிறார் சாரா.
மாற்றுத்திறனாளியான சாரா, வீட்டிலிருக்க பயந்து, வேலைக்குப் போனாலாவது நிம்மதி கிடைக்கும் என்று எண்ணி வேலைக்குச் செல்கிறார். நான் வேலை செய்யும் இடம் மட்டுமே எனக்கு பாதுகாப்பான இடம் என்கிறார் அவர்.
என் சொந்த வீட்டிலேயே எனக்கு பாதுகாப்பில்லை
தன் கணவருடைய மகன், ஒரு நாளைக்கு 10 முறையாவது தனது உடற்குறைபாட்டைக் குத்திக் காட்டி மோசமான வார்த்தைகளால் தன்னை அழைப்பதாகத் தெரிவிக்கிறார் சாரா.
நீ இந்த வீட்டில் அதிக காலம் இருக்கமாட்டாய், ஏன் தெரியுமா? ஏனென்றால், நான் அதைச் செய்துகாட்டுவேன் என மிரட்டுகிறாராம் அந்த இளைஞர். அவருடைய தந்தை மகனை தட்டிக் கேட்டால், அவரையே தாக்கி காயப்படுத்திவிட்டாராம் அந்த இளைஞர்.
சாரா பொலிசாரிடம் புகாரளிக்க, அவர்கள் அவரை வேறொரு வீட்டில் தங்கவைத்தார்களாம். ஆனால், அவர் இப்போது மீண்டும் வீட்டுக்குத் திரும்பிவிட்டாராம். ஆகவே, இப்படி பிள்ளைகளால் துன்புறுத்தப்படும் பெற்றோருக்கான அமைப்பு ஒன்று தற்போது சாராவுக்கு உதவி வருகிறது.
PEGS