மொத்த சம்பளத்தையும் விவசாயிகளின் மகள்களுக்கு அளிக்கிறேன்! ஹர்பஜன் சிங் அறிவிப்பு
முன்னாள் கிரிக்கெட் வீரரும் ஆம் ஆத்மி எம்.பி-யுமான ஹர்பஜன் சிங், விவசாயிகளின் மகள்களின் கல்வி மற்றும் நலனுக்காக தனது ராஜ்யசபா சம்பளத்தை வழங்குவதாக அறிவித்துள்ளார்.
ஹர்பஜான் சிங் தனது ட்விட்டரில் பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
ராஜ்யசபா உறுப்பினராக, விவசாயிகளின் மகள்களின் கல்வி மற்றும் நலனுக்காக எனது சம்பளத்தை பங்களிக்க விரும்புகிறேன்.
நமது தேசத்தின் முன்னேற்றத்திற்கு பங்களிக்க நான் இணைந்துள்ளேன், என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என ஹர்பஜான் சிங் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
உக்ரைனில் இயல்பு வாழ்க்கை திரும்புகிறது! ஜனாதிபதி ஜெலன்ஸ்கி முக்கிய அறிவிப்பு
பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக ஹர்பஜன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நேர்மையாக நிறைவேற்றும் பொறுப்பு தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் விளையாட்டை ஊக்குவிப்பேன் என்று ஹர்பஜன் சிங் கூறியிருந்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்த ஹர்பஜன் சிங், 2021 டிசம்பர் மாதம் அனைத்துவகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.