தோனி உலகக்கோப்பையை வென்றார் என்றால்...மற்ற வீரர்கள் என்ன செய்தார்கள்? ஹர்பஜன் சிங் ஆவேசம்!
தோனி உலகக்கோப்பையை வென்றால் என்றால் மீதமுள்ள 10 பேர் அணியில் என்ன செய்தார்கள் என ஹர்பஜன் சிங் கோபத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் தோனி கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து போட்டியை முடித்ததுடன் 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா தனது உலகக்கோப்பை கனவையும் தீர்த்து கொண்டது.
இந்தநிலையில் அதில் விளையாண்ட முக்கிய இந்திய சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் உலகக்கோப்பையை வென்றது இந்திய அணி தான், தோனி இல்லை, மேலும் உலக கோப்பையை குழுவாக இணைந்து தான் வெற்றி பெற முடியும் தனி ஒருவரால் முடியாது என காட்டமாக தெரிவித்துள்ளார்.
Bhajji on ????... But no hate for MS ? pic.twitter.com/4tXxc90lt6
— Arghya Dey (@91_arghya) April 11, 2022
ஐபிஎல் டெல்லி அணிக்கும் கொல்கத்தா அணிக்கும் இடையிலான போட்டி குறித்த ஆலோசனையின் போது ஹர்பஜன் சிங் இதனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹர்பஜன் சிங் பேசியதாவது, அவுஸ்தியரேலியா உலக கோப்பையை வென்றால் அனைவரும் அவுஸ்தியரேலியா உலகக்கோப்பையை வென்றது என கூறுகிறார்கள் ஆனால் இங்கு தோனி உலகக்கோப்பையை வென்றார் என சிலர் ரசிகர்கள் கருதி வருகின்றனர்.
அப்படியென்றால் மற்ற வீரர்கள் அணியில் என்ன செய்தனர், அதே போட்டியில் விக்கெட்கள் சரிந்த போது நிதானமாக விளையாடி 79 பந்துகளில் 91 ஓட்டங்கள் சேர்த்த கெளதம் கம்பிர் என்ன செய்தார், அதிக விக்கெட்களை வீழ்த்திய யுவராஜ் சிங் என செய்தார் என கேள்வி எழுப்பினார்.
தோனி இறுதி ஆட்டத்தில் அதிரடியாக விளையாண்டு 97 ஓட்டங்கள் குவித்தார், அத்துடன் அவர் சிக்ஸர் அடித்து முடித்ததால் அவர் ரசிகர்கள் மனதில் வெற்றி நிமிடத்தில் பதிந்து கொண்டார் அவ்வளவுதான் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அணி வெற்றிபெற வேண்டுமென்றால் 7 முதல் 8 வீரர்களாவது தொடர்ந்து நல்ல முறையில் செயலாற்ற வேண்டும் என அப்போதுதான் வெற்றிபெற முடியும் என தெரிவித்துள்ளார்.
சிலவருடங்களுக்கு முன்பு 2011 ம் ஆண்டு இந்தியா உலகக்கோப்பையை வென்ற தருணம் , இந்தியர்கள் உலகக்கோப்பையை வென்ற தருணம் என தெரிவித்து தோனி சிக்ஸர் அடிக்கும் சமூக இணையதள பதிவிற்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் கெளதம் கம்பிர் கோபத்துடன் ரியாக்ட் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.