நாட்டு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ஹர்பஜன் சிங்!
காலிஸ்தானிய தீவிரவாதி Bhindranwale-க்கு அஞ்சலி செலுத்தி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதற்கு கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட பின்னர் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டது தொடர்பில் மன்னிப்பு கோரி விளக்கம் அளிக்க விரும்புகிறேன்.
வாட்ஸ்அப்பில் வந்த அந்த புகைப்படத்தின் உண்மை தன்மையை அறியாமல் அவசரத்தில் நான் பதிவிட்டுவிட்டேன்.
அது என்னுடைய தவறு தான், நான் அதை ஏற்றுக்கொள்கிறேன். அந்த புகைப்படத்தில் இருந்த நபர்கள் யாரையும் நான் ஆதரிக்கவில்லை.
இந்தியாவுக்காக போராடும் சீக்கியர்களில் நான் ஒருவன், இந்தியாவுக்கு எதிராக அல்ல.
என் நாட்டு மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன்.
உண்மையில் என் மக்களுக்கு எதிரான எந்த தேசவிரோத குழுவையும் நான் ஆதரித்ததில்லை, இனியும் ஆதரிக்கபோவதில்லை.
My heartfelt apology to my people..?? pic.twitter.com/S44cszY7lh
— Harbhajan Turbanator (@harbhajan_singh) June 7, 2021
20 ஆண்டுகளாக இந்த நாட்டிற்காக என் இரத்தத்தையும் வியர்வையையும் தந்துள்ளேன், தேசவிரோதமான எதையும் நான் ஆதரிக்கமாட்டேன் என ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.