மித்தாலி ராஜுக்கு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வாழ்த்து
ஓய்வு அறிவித்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை மித்தாலி ராஜூக்கு முன்னாள் வீரர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மகளிர் கிரிக்கெட் உலகில் பல்வேறு சாதனைகள் படைத்த இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
உங்களின் ஆசியுடனும், ஆதரவுடனும் எனது இரண்டாவது இன்னிங்சை எதிர்பார்க்கிறேன் என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், மித்தாலி ராஜுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
(File photo)
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'பலரை பேட் எடுத்து விளையாட நீங்கள் ஊக்கப்படுத்தியிருக்கிறீர்கள்! உங்கள் கேரியரை நினைத்து பெருமையாக உள்ளது. நீல நிற ஜெர்சி அணிந்து நீங்கள் விளையாடியதை பார்த்தது முழு மகிழ்ச்சியாக இருந்தது. உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்' என தெரிவித்துள்ளார்.
You have inspired many to take the bat and play for India! Be very proud of your career @M_Raj03 ?? It was an absolute delight to watch you in blue. All the very best for your future.
— Harbhajan Turbanator (@harbhajan_singh) June 8, 2022
(Wikipedia)