என்னை யூஸ் பண்ணி ஏமாற்றிட்டாங்க: ஹர்பஜன்சிங் வேதனை
நான் உலகக்கோப்பை வென்ற பிறகு இந்திய அணியில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை, இது எனக்கு ஏமாற்றத்தை கொடுக்கிறது என்று வேதனை தெரிவித்துள்ளார் ஹர்பஜன்சிங்.
வேதனை தெரிவித்த ஹர்பஜன்சிங்
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது அவர் பேசுகையில், என்னை உலகக்கோப்பையை வெல்வதற்காக மட்டும்தான் என்னை பயன்படுத்தினார்கள்.
அதன் பிறகு என்னை ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு வழங்கவில்லை. என்ன காரணம், என்ன ரகசியம் இருக்கும் என்று எனக்கு காரணம் தெரியவில்லை. இது எனக்கு ஏமாற்றம் தான்.
இந்திய அணியில் உலக கோப்பையை வென்று கொடுத்த அனைவரும் மீண்டும் ஏதேனும் ஒரு போட்டியில் இணைந்து விளையாடினால் எங்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சி இருந்திருக்கும். ஆனால், நாங்கள் இணையவே இல்லை. எனக்கு புரியவே இல்லை. எப்படி உலகக்கோப்பை வென்ற ஒரு அணியில் திடீர் அதிரடி மாற்றம் நிகழும்.
ஒருவேளை வெற்றி பெற்ற வீரர்கள் சரி இல்லையா? அதனால் அனுப்பிவிட்டார்களா? அப்பவே, உலகக்கோப்பையில் விளையாடும்போது சில வீரர்களுக்கு தெரிந்தது இதுதான் நமக்கு கடைசி உலகக்கோப்பை என்று. எங்களுக்கு வயதாகி இருந்ததுதான். வாய்ப்பு கொடுத்திருந்தால் நாங்கள் இன்னும் நிறைய போட்டிகளில் விளையாடியிருப்போம் என்றார்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |