கவலை வேண்டாம்.. நம்ம தோனி இருக்காரு- ரசிகர்களை உற்சாகப்படுத்திய ஹர்பஜன்
கவலை வேண்டாம், நம்ம தோனி இருக்கிறார் என்று சோகத்தில் மூழ்கிய ரசிகர்களுக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உற்சாகப்படுத்தியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி
ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த 16வது ஐபிஎல் தொடர் நேற்று அகமதாபாத்தில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் கோலாகமாக தொடங்கியது. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 178 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் 19.2 ஓவரில் 5 விக்கெட் இழந்து 182 ரன்கள் எடுத்து அசத்தியது. இதன் மூலம் சென்னையை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தில் குஜராத் அபார வெற்றி பெற்றது.
மிகுந்த ஆர்வத்தோடு இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஏமாற்றமும், சோகமும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் தங்களது வேதனையை தெரிவித்து வருகிறார்கள்.
ரசிகர்களை உற்சாகப்படுத்திய ஹர்பஜன்
இந்நிலையில், இது குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொர்பாக அவர் பேசுகையில்,
‘யுத்தத்துல முதல்ல யார் அடிக்குறாங்கன்னு கணக்கு இல்லை... முதல்ல யார் கீழே விழுறதுதான் கணக்கு... ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ இவங்க விழுவது போல் கொஞ்சம் விழுவாங்க எதிரிகள் சுகம் காண.. ரசிகர்களே கவலை வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.