CSK தோல்வியுற்றது இதனால்தான்: ஹர்பஜன் சிங் கூறிய காரணம்
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியுற்றது குறித்து முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
CSK தோல்வி
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸை வீழ்த்தியது.
இந்த தோல்வியால் சென்னை அணி சூப்பர் கிங்ஸ் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் CSK அணியின் CSK தோல்வி குறித்து கூறுகையில், "சென்னை சூப்பர் கிங்ஸ் மிகவும் பெரிய அணி. இளம் வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு அவர்களுக்கு ஏலத்தில் இருந்தது.

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன்
இப்போது அவர்களிடம் உள்ள இளம் வீரர்களும் போட்டியை மாற்றுபவர்களாக அசத்தவில்லை. இது தோல்விக்கு முக்கிய காரணம்.
இதற்கு திறமையான வீரர்களை கண்டறியும் CSK அணியின் நிர்வாகம் பற்றி கேள்வி கேட்கப்பட வேண்டும். ஏனெனில் அவர்களுடைய தேர்வு அப்படி அமைந்துள்ளது" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |