ஐபிஎல் 2025 கிண்ணத்தை இந்த அணிதான் கைப்பற்றும்! உறுதியாக நம்புகிறேன் - ஹர்பஜன் சிங்
நடப்பு ஐபிஎல் கிண்ணத்தை எந்த அணி வெல்லும் என்பதற்கான கணிப்பை முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் வெளிப்படுத்தியுள்ளார்.
ஹர்பஜன் சிங் கணிப்பு
ஐபிஎல் 2025 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்துவிட்டன.
மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் கிட்டத்தட்ட ப்ளே ஆப் வாய்ப்பை நெருங்கிவிட்டன. இதனால் நான்காவது இடத்திற்கு 4 அணிகள் போட்டி போடுகின்றன.
இந்த நிலையில் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் (Harbhajan Singh) எந்த அணி சாம்பியன் ஆகும் என்ற தனது கணிப்பை கூறியுள்ளார்.
வெல்லக்கூடிய அணி
இதுதொடர்பாக அவர் கூறுகையில், "இந்த வருடம் மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் கிண்ணத்தை வெல்லவில்லை என்றால், மற்ற அணிகளும் கிண்ணத்தை வெல்ல தகுதியற்றவை.
குறிப்பாக, பும்ரா ஒருவரை பற்றி மட்டும் நான் கூறவில்லை, அந்த அணியில் பும்ராவை தவிர்த்து டிரெண்ட் போல்ட், தீபக் சாஹர், வில் ஜேக்ஸ், பாண்ட்யா, கரன் ஷர்மா மற்றும் கார்பின் போஷ் என பலரும் பந்துவீசி வருகின்றனர்.
எனவே என்னைப் பொறுத்தவரை மும்பை அணியில் உள்ள 11 பேரும் Match Winnersதான். அவர்களிடம் போட்டியை வெல்லக்கூடிய அணி உள்ளது. இது அவர்களின் ஆண்டு. மும்பை 6வது கிண்ணத்தை வெல்லும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |