அரசியல் கட்சியில் இணைய உள்ளாரா ஹர்பஜன் சிங்? அவரே கூறிய பதில்
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதை தொடர்ந்து ஹர்பஜன் சிங், அரசியல் கட்சியில் இணைய உள்ளதாக பரவி செய்தி குறித்து அவரே தெளிவுப்படுத்தியுள்ளார்.
இந்திய நட்சத்திர வீரர் ஹர்பஜன் சிங், டிசம்பர் 24ம் திகதி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து, ஹர்பஜன் சிங் பிரபல ஐபிஎல் அணியின் பயிற்சி ஊழியராக சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
அதேசமயம், பஞ்சாப் தேர்தலை முன்னிட்ட அவர் உடனடியாக காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக செய்திகள் பரவின.
இதுதொடர்பாக ஹர்பஜன் சிங் கூறியதாவது, அனைத்து கட்சிகளிலிருந்தும் எனக்கு அரசியல் வாதிகளை தெரியும்.
கண்டிப்பாக பஞ்சாப்பிற்காக சேவை ஆற்றுவேன், ஒருவேளை அரசியல் வழியாக அல்லது வேறு வழியாக கூட சேவை ஆற்றுவேன்.
தற்போது வரை தந்த முடிவும் நான் எடுக்கவில்லை என ஹர்பஜன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.