நான் என்ன மறைச்சேனு நீயே பாரு! டோனியை மறைத்ததாக கூறிய ரசிகருக்கு பதிலடி கொடுத்த ஹர்பஜன்: வைரலாகும் புகைப்படம்
இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
கடந்த 2007-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில், இந்திய அணி கோப்பையை வென்று சாதனை படைத்தது.
டோனி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்ற தினம் இன்று என்று கூறி, இன்று காலை முதல் சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
மேலும், இந்த போட்டியின் போது இருந்த வீரர்கள் பலரும் இதை நினைவுபடுத்தும் வகையில், புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தி, 2007-ஆம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பை வென்ற புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.
When your FAITH become stronger than your FEAR … then your dream can become a reality #champions #T20WorldCup2007 #TeamIndia pic.twitter.com/fuOWN2VLba
— Harbhajan Turbanator (@harbhajan_singh) September 24, 2021
அப்போது அந்த புகைப்படத்தின் ஓரத்தில், ஒருவரை மறைப்பது போன்று கப் எமோஜியை மறைந்திருந்தார். உடனே இதைக் கண்ட ரசிகர் ஒருவர், நல்லது டோனியின் புகைப்படத்தை மறைத்துவிட்டீர்கள் என்று குறிப்பிட்டார்.
உடனே ஹர்பஜன் சிங் அந்த புகைப்படத்தை மீண்டும் எந்த ஒரு எமோஜியும் இல்லாமல் பதிவிட்டு, நான் எதை நீக்கினேன் என்று நீங்கள் பார்க்க விரும்பினால், இப்போது நீங்கள் அதை நக்கலாம் என்று நக்கலாக குறிப்பிட்டார்.
Now u can lick what u see in the picture I cropped https://t.co/K5m8mHU2go pic.twitter.com/LRrLf2LsME
— Harbhajan Turbanator (@harbhajan_singh) September 24, 2021
அதாவது ஹர்பஜன் மறைத்திருந்தது, டோனி அல்ல, அது ஒரு புகைப்படக்காரர் இருந்தார். அதோடு போட்டால் அசிங்கமாக இருக்குமே என்று ஹர்பஜன் அதை அப்படி செய்ய, ஆனால் ரசிகர் ஒருவர் இப்படி கேட்டதால், ஹர்பஜன் உடனே பதிலடி கொடுத்துவிட்டார்.