இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட கனடாவில் வசிக்கும் பயங்கரவாதி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்!
இந்தியாவில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய கனடாவை சேர்ந்த பயங்கரவாதி மீது என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்கள், வெடி பொருட்கள் பெற்று பஞ்சாப் மாநிலம் ஜலந்தரை சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டார்.
இவர் கனடாவின் சர்ரேவில் வசித்து வருகிறார். இவர் பாபர் கல்சா என்ற தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பில் உள்ளார்.
இந்த அமைப்பு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பயங்கர தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டிய வழக்கை என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்தது.
இதையடுத்து ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மீது யு.ஏ.பி.ஏ., உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கில் நிஜ்ஜார் மீது என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில் அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
பல்வேறு பணப் பரிமாற்ற நிறுவனங்கள் மற்றும் ஹவாலா வாயிலாக கனடாவில் இருந்து இந்தியாவுக்கு நிஜ்ஜார் பணப் பரிமாற்றம் செய்துள்ளார்.
இதன் வாயிலாக பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்கள், வெடி பொருட்கள் பெற்று பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டார் என கூறப்பட்டுள்ளது.