31 வயதில் ரூ 3,970 கோடி சொத்து மதிப்பு... யாரிந்த ஹர்திக் கோத்தியா
பிரபல இளம் தொழிலதிபரான ஹர்திக் கோத்தியா, ஷார்க் டேங்க் இந்தியா சீசன் 5-ல் புதிய 'ஷார்க்'குகளில் ஒருவராக இடம்பெறுவதால், அவர் பட்டிதொட்டியெங்கும் அறியப்படும் ஒரு பெயராக மாறவிருக்கிறார்.
ரேஸான் சோலார்
குஜராத்தின் சூரத்தைச் சேர்ந்த, முன்னணி சூரிய மின்சக்தி பேனல் உற்பத்தி நிறுவனமான ரேஸன் சோலாரின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆவார் ஹர்திக் கோத்தியா.

வர்த்தகப் பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் 1994ல் பிறந்த கோத்தியா ஒரு புகழ்பெற்ற கல்லூரியில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.
2017-ல் சிராக் நக்ரானியுடன் இணைந்து நிறுவிய ரேஸான் சோலார் நிறுவனத்தின் மூலம் தனது தொழில்முனைவோர் பயணத்தைத் தொடங்கினார்.
வெறும் எட்டு ஆண்டுகளில், அந்த நிறுவனம் ஒரு சிறிய அமைப்பிலிருந்து இந்தியாவின் முதல் ஐந்து சூரிய மின்சக்தி நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்து, சுமார் 7,000 கோடி ரூபாய் மதிப்பீட்டைப் பெற்றது.
சொத்து மதிப்பு 3,970 கோடி
31 வயதில், அவர் ஹுருன் இந்தியா U35 பட்டியலில் 2025-ல் இடம்பெற்ற இளைய தொழில்முனைவோராக அங்கீகரிக்கப்பட்டார். அவரது தலைமையின் கீழ், ரேஸான் சோலார் நிறுவனம் 2025-ஆம் ஆண்டிற்குள் தனது உற்பத்தித் திறனை 6.0 ஜிகாவாட்டாக விரிவுபடுத்தியது.
மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் போன்ற ஐபிஎல் அணிகளுடனான கூட்டாண்மைகள் மூலம் வளர்ச்சியை உருவாக்கிக்கொண்டார்.

அவரது நிகர சொத்து மதிப்பு 3,970 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது, இது அவரை ஷார்க் டேங்க் இந்தியா சீசன் 5 குழுவில் உள்ள கோடீஸ்வர நீதிபதியாக மாற்றியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |