இலங்கை கேப்டனுடன் முதலிடத்தை பகிர்ந்துகொண்ட ஹர்திக் பாண்ட்யா! முதல் இந்தியராக வரலாற்று சாதனை
டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா புதிய சாதனை படைத்துள்ளார்.
ஹர்திக் பாண்ட்யா
இந்திய கிரிக்கெட் அணி இரண்டாவது முறையாக டி20 உலகக்கிண்ணத்தை கைப்பற்ற முக்கிய காரணமாக அமைந்தவர் ஹர்திக் பாண்ட்யா.
144 ஓட்டங்கள் குவித்த ஹர்திக் 150 ரன்னுக்கு மேல் துடுப்பாட்ட ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார். மேலும் 11 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
தென் ஆப்பிரிக்காவுடனான இறுதிப் போட்டியில் கிளாசென், மில்லர் ஆகியோரின் விக்கெட்டுகளை ஹர்திக் பாண்ட்யா கைப்பற்றியது திருப்புமுனையாக அமைந்தது.
டி20 வரலாற்றில் புதிய சாதனை
2024 டி20 உலகக்கிண்ணத்தில் ஒரு ஆல்-ரவுண்டராக சிறப்பான பங்களிப்பை அளித்த ஹர்திக் பாண்ட்யா (Hardik Pandya), டி20 வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார்.
அதாவது ஆல்ரவுண்டர் பட்டியலில் ஹர்திக் முதலிடம் பிடித்துள்ளார். ஏற்கனவே முதலிடத்தில் உள்ள இலங்கை அணித்தலைவர் வனிந்து ஹசரங்காவுடன் அவர் முதல் இடத்தை பகிர்ந்துள்ளார்.
இதற்கு முன்பு எந்த இந்திய வீரரும் டி20 வரலாற்றில் ஆல்ரவுண்டர் பட்டியலில் முதலிடம் பிடித்ததில்லை.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |