ஐபிஎல் 2023: அரைசதம் விளாசிய குஜராத் கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா அரைசதம் விளாசினார்.
குஜராத் டைட்டன்ஸ்
துடுப்பாட்டம் ஐபிஎல் 2023யின் 30வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதி வருகின்றன.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் அணி துடுப்பாட்டத்தை துவங்கியது. கில் இரண்டாவது பந்திலேயே ஓட்டங்கள் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, மற்றொரு தொடக்க வீரர் சஹாவுடன் சேர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
Our skipper scores a half-century!⚡@hardikpandya7 | #LSGvGT | #AavaDe | #TATAIPL 2023 pic.twitter.com/BssS5ZWNtK
— Gujarat Titans (@gujarat_titans) April 22, 2023
பவுண்டரிகளை விரட்டிய சஹா 47 ஓட்டங்களில் குர்னால் பாண்ட்யா பந்துவீச்சில் ஆட்டமிழந்து அரைசதத்தினை தவறிவிட்டார்.
ஹர்திக் பாண்ட்யா அரைசதம் விளாசல்
அதன் பின்னர் வந்த அபினவ் மனோகர், விஜய் ஷங்கர் ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்த நிலையில், அதிரடியில் இறங்கிய ஹர்திக் பாண்ட்யா 44 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
அதனைத் தொடர்ந்து சிக்ஸர்களை விளாசிய ஹர்திக், 50 பந்துகளில் 4 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 66 ஓட்டங்கள் எடுத்து ஸ்டோய்னிஸ் ஓவரில் அவுட் ஆனார்.
We finish with 1⃣3⃣5⃣/6️⃣ on the board! ?
— Gujarat Titans (@gujarat_titans) April 22, 2023
Time to defend this! ?#LSGvGT #AavaDe #TATAIPL 2023 pic.twitter.com/oKGGVV0JDy
ஹர்திக்கிற்கு இது 9வது அரைசதம் ஆகும். குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 135 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
லக்னோ அணியின் தரப்பில் ஸ்டோய்னிஸ், குர்னால் தலா 2 விக்கெட்டுகளும், அமித் மிஸ்ரா மற்றும் நவீன் உல் ஹக் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
Cometh the hour, cometh ???????-??? ?@Wriddhipops | #LSGvGT | #AavaDe | #TATAIPL 2023 pic.twitter.com/i5oi6vkffJ
— Gujarat Titans (@gujarat_titans) April 22, 2023