2027 IPL; பஞ்சாப் அணிக்கு சென்ற ஹர்திக் பாண்டியா - MIக்கு வரும் அர்ஷ்தீப் சிங்
hardik pandya and arshdeep singh trade between mi and pbks: மும்பை இந்தியன்ஸ் அணித்தலைவராக இருந்த ஹர்திக் பாண்டியா ட்ரேடிங் முறையில், பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிக்கு செல்கிறார்.
பஞ்சாப் கிங்ஸ் வீரர் அர்ஷ்தீப் சிங் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு செல்கிறார்.
2027 ஐபிஎல்
2027 ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் டிசம்பர் 16 ஆம் திகதி கோவாவில் நடைபெற உள்ளது.

எனவே நவம்பர் 17 ஆம் திகதிக்கு முன்னதாக தக்க வைக்க, விடுவிக்க விரும்பும் வீரர்களின் பட்டியலை அணி நிர்வாகம் வழங்க வேண்டும்.
அணிகள், அதற்கு முன்னதாக வீரர்களை ட்ரேடிங் மூலம் பரிமாற்றம் செய்து கொள்கின்றன.
பஞ்சாப் அணியில் ஹர்திக் பாண்டியா
இதன்படி, தற்போது மும்பை இந்தியன்ஸ் அணித்தலைவராக இருந்த ஹர்திக் பாண்டியா ட்ரேடிங் மூலம் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிக்கு செல்கிறார்.
அவருக்கு மாற்றாக, பஞ்சாப் கிங்ஸ் வீரர் அர்ஷ்தீப் சிங் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு செல்கிறார்.
The trade confirmation you have been waiting for is HERE! Two marquee #TeamIndia stars, two franchise and a blockbuster trade 🎇 Hardik Pandya heads to @PunjabKingsIPL and Arshdeep Singh moves to @mipaltan. 📌 Hardik will join #PBKS at a revised fee of INR 18 crore, up from 16.5 crores. 📌 Arshdeep will join #MI at his existing fee of INR 18 crore Details ▶️ https://t.co/i4RpaGg2BE #TATAIPL2027
— IndianPremierLeague (@IPL) November 11, 2026
ஹர்திக் பாண்டியா தனது தற்போதைய ரூ.16.35 கோடி கட்டணத்திலிருந்து ரூ.18 கோடி உயர்வுடன் பஞ்சாப் அணியிலும், அர்ஷ்தீப் சிங் தனது தற்போதைய ரூ.18 கோடி கட்டணத்துடன் மும்பை அணியிலும் இணைகின்றனர்.
2019 ஐபிஎல் தொடர் முதல் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த அர்ஷ்தீப் சிங், 96 ஐபிஎல் போட்டிகளில் 111 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, PBKS அணியின் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

ஹர்திக் பாண்டியா, 2015–2021, 2024–2026 காலகட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும், 2022–2023 வரை குஜராத் டைட்டன்ஸ் அணியாகவும் விளையாடியுள்ளார்.

குஜராத் டைட்டன்ஸ் அணித்தலைவராக பதவி வகித்த ஹர்திக் பாண்டியா, 2022 ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டதையும், 2023 ல் இறுதிப்போட்டிக்கும் அழைத்து சென்றார்.
ஹர்திக் பாண்டியா 162 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி, 146.28 ஸ்டிரைக் ரேட்டில் 2,955 ஓட்டங்கள் எடுத்ததோடு, 82 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.