இந்திய அணியின் கேப்டனான ஹர்திக் பாண்ட்யா! பிசிசிஐ அறிவிப்பு
அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது. ஒரு டெஸ்ட், மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது.
இங்கிலாந்து எதிரான பயிற்சி ஆட்டம் ஜூன் 24ஆம் திகதி நடக்கிறது. இதற்கு முன்பாக, ஜூன் 26, 28 திகதிகளில் அயர்லாந்து அணியுடன் இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது.
இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக கேப்டன்சி செய்த ஆல்ரவுண்டர் வீரர் ஹர்திக் பாண்ட்யா தலைமை ஏற்று விளையாட உள்ளார். துணை கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
Photo Credit: Google
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் புவனேஷ்வர் குமார் 13 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டியிருந்தார். அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் ஐபிஎல் தொடரில் வேகப்பந்து வீச்சில் மிரட்டிய உம்ரான் மாலிக் இடம்பெற்றுள்ளார்.
Photo Credit: Sportzpics for BCCI
இந்திய அணி விபரம்: ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), புவனேஷ்வர் குமார் (துணை கேப்டன்), இஷான் கிஷண், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), யுஸ்வேந்திர சஹால், அக்சர் பட்டேல், ரவி பிஸ்னாய், ஹர்ஷல் பட்டேல், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்.
Photo Credit: IPL Photo