எனக்கு அடுத்து 6 பந்தில் 6 சிக்ஸர் அடிக்கும் இந்திய வீரர் இவராகத் தான் இருப்பார்! யுவராஜ் சிங் கணிப்பு
இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங், இந்திய அணியில் அடுத்து யாரால் 6 பந்துக்கு 6 சிக்ஸர் அடிக்க முடியும் என்று கணித்துள்ளார்.
இந்திய அணியில் ஒரு காலத்தில் அதிரடி ஆட்டக்காரராக இருந்தவர் தான் யுவராஜ் சிங், இந்திய அணி டி20 உலகக்கோப்பை, ஒருநாள் உலகக்கோப்பை என முக்கிய கோப்பைகள் கைப்பற்ற யுவராஜ் சிங்க்கின் அதிரடியும் ஒரு காரணம்.
இவர் டி20 உலகக்கோப்பையின் போது இங்கிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில், 6 பந்துக்கு 6 சிக்ஸர் அடித்து சாதனை படைத்தார்.
து குறித்து இப்போது இவர் கூறுகையில், ந்திய அணியில் நான் 6 பந்துகளில் 6 சிக்சர்களை அடித்தது போன்று தற்போது உள்ள வீரர்களில் அதிரடி ஆட்டக்காரரான ஹர்டிக் பாண்டியாவால் 6 பந்துகளில் 6 சிக்சர்கள் அடிக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
சிக்சர்களை அடிக்கும் பலமும், பேட்டிங்கில் நுணுக்கமும் அவரிடம் இருப்பதால் நிச்சயம் அவர் இந்த சாதனையை சர்வதேச கிரிக்கெட்டில் படைக்க முடியும் என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.