நாங்கள் போராடினோம்.,ஆனால் மழை: தோல்வி குறித்து பேசிய ஹர்திக் பாண்ட்யா
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில், மழை தொடர்ந்து பெய்தது தங்களுக்கு கடினமாக இருந்ததாக மும்பை இந்தியன்ஸ் அணித்தலைவர் ஹர்திக் பாண்ட்யா தெரிவித்தார்.
குஜராத் டைட்டன்ஸ் வெற்றி
நேற்று நடந்த ஐபிஎல் லீக் 56வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் 155 ஓட்டங்கள் எடுத்தது. வில் ஜேக்ஸ் 53 (35) ஓட்டங்கள் விளாசினார்.
பின்னர் குஜராத் டைட்டன்ஸ் அணி ஆடியபோது மழை குறுக்கிட்டது. அந்த அணி 19 ஓவரில் 147 ஓட்டங்கள் எடுத்தது. இதனால் DLS முறையில் 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஹர்திக் பாண்ட்யா
தோல்விக்கு பின்னர் பேசிய ஹர்திக் பாண்ட்யா, "நாங்கள் நன்றாக போராடினோம் என்று நினைக்கிறேன். ஒரு குழுவாக நாங்கள் தொடர்ந்து முன்னேறினோம். அது 150 விக்கெட் இல்லை என்று நினைக்கிறேன், ஆனால் நாங்கள் 25 ஓட்டங்கள் குறைவாக எடுத்தோம்.
பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து போராடியதற்கு நன்றி. கேட்சுகளை தவறவிட்டாலும், கேட்சுகள் எங்களை அதிகம் கடிக்கவில்லை. வீரர்கள் களத்தில் 120 சதவீதத்தை கொடுத்து விட்டுக்கொடுக்காமல் இருந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
முதல் இன்னிங்சில் மைதானம் ஈரமாக இல்லை, ஆனால் மழை தொடர்ந்து வந்ததால் எங்களுக்கு கடினமாக இருந்தது. நாங்கள் ஆட்டத்தை விளையாட வேண்டியிருந்தது, அதை செய்தோம்" என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |