ஹர்திக்கின் செயலால் அதிர்ச்சியடைந்த கே.எல்.ராகுல்: வீடியோ
குஜாராத் அணித்தலைவர் ஹர்திக் பாண்ட்யா நாணயச் சுழற்சியின் போது கே.எல்.ராகுலை குழப்பிய சம்பவம் நேற்றைய போட்டியில் நடந்தது.
ஐபிஎல்லின் 57வது லீக் போட்டி புனேவில் நேற்று நடந்தது. இந்தப் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின.
கே.எல்.ராகுல் நாணயத்தை சுழற்றினார். அப்போது ஹர்திக் பூவா தலையா என சத்தமாக கேட்கவில்லை. சுழற்சியில் தலை விழுந்தது. அதனைத் தொடர்ந்து தலை தான் கேட்டதாகவும், நாணய சுழற்சியில் வென்றுவிட்டதாக ஹர்திக் கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த ராகுல், நீங்கள் பூ தானே கேட்டீர்கள் என்று வினவினார்.
#GujaratTitans have won the toss and they will bat first against #LSG.
— IndianPremierLeague (@IPL) May 10, 2022
Live - https://t.co/45TbqyBfE3 #LSGvGT #TATAIPL pic.twitter.com/pQB53PfPD3
மேலும் நடுவரிடமும் அதனை கூறினார். ஆனால் ஹர்திக் பாண்ட்யா தலை தான் கேட்டார் என அவர் கூற, ராகுல் அங்கிருந்து நகர்ந்தார். இதுதொடர்பான வீடியோவை ரசிகர்கள் கங்குலியுடன் ஒப்பிட்டு பகிர்ந்து வருகின்றனர்.
கடந்த 2001ஆம் ஆண்டு இந்தூரில் நடந்த ஒருநாள் போட்டியின்போது, இந்திய அணித்தலைவர் சவுரவ் கங்குலி இதே போல் அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவ் வாக்கை குழம்பினார்.
https://www.youtube.com/watch?v=T4183JgtIwo

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021