மனைவி மற்றும் குழந்தையுடன் வெளிநாட்டில் ஜாலியாக ஊர் சுற்றிய ஹர்திக் பாண்டியா! புகைப்படங்கள்
அவுஸ்திரேலியாவில் குடும்பத்தாருடன் ஜாலியாக ஊர் சுற்றிய ஹர்திக் பாண்டியா.
டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க ஹர்திக் பாண்டியா அவுஸ்திரேலியா சென்றிருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்திக் பாண்டியா தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஜாலியாக ஊர் சுற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
அவுஸ்திரேலியாவில் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதையடுத்து இந்திய அணியில் இடம்பிடித்துள்ள ஹர்திக் பாண்டியா தனது மனைவி மற்றும் குழந்தையுடன் அங்கு உள்ளார்.
இந்நிலையில் மனைவி நடாஷா மற்றும் மகன் அகஸ்தியா ஆகியோருடன் ஜாலியாக பாண்டியா ஊர் சுற்றியுள்ளார். மூவரும் மெல்போர்னில் உள்ள சீ லைப் அக்கோரியமை சுற்றி பார்த்தனர்.
இது தொடர்பான புகைப்படங்களை நடாஷா சமூகவலைதளத்தில் வெளியிட அது லைக்குகளை குவித்து வைரலாகியுள்ளது.
இந்திய அணி டி20 உலகக்கோப்பை தொடரில் தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை நாளை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Credit: IG/hardikpandya93