இலங்கை வீரர் தீக்ஷனாவின் அபாரமான யார்க்கர் பந்துவீச்சு! தடுமாறி கீழே விழுந்த ஹர்திக் பாண்டியா
இந்தியா - இலங்கை அணிகள் மோதிய முதல் டி20 போட்டியில் மஹீஷ் தீக்ஷனாவின் யார்க்கர் பந்தை சமாளிக்க முடியாமல் ஹர்திக் பாண்டியா கீழே தடுமாறி விழுந்தார்.
இப்போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை சுவைத்தது. இதில் இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இலங்கை சுழற்பந்து வீச்சாளர்
போட்டியின் ஒரு கட்டத்தில் 13வது ஓவரை இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷனா வீச ஹர்திக் எதிர்கொண்டார். அந்த ஓவரின் 5வது பந்தில் தீக்ஷனா அபாரமான யார்க்கரை வீச பந்து ஹர்திக்கின் கால்விரல்களில் ஸ்விங் ஆனது.
Disney+Hotstar
தடுமாறி விழுந்த ஹர்திக் பாண்டியா
அப்போது திணறிய ஹர்திக் தரையில் கீழே விழுந்தார், சில நொடிகள் முழுவதுமாக தரையில் இருந்த நிலையில் பின்னர் சுதாரித்து எழுந்தார்.
இதன்பிறகு 27 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து தில்ஷன் மதுஷங்கா பந்துவீச்சில் குசல் மெண்டீஸிடம் கேட்ச் ஆகி அவுட்டாகி பெவிலியனுக்கு திரும்பினார் ஹர்திக் பாண்டியா.
Mahesh Theekshana bowls a Yorker ?
— cric_mawa (@cric_mawa_twts) January 3, 2023
Which completely beats hardik pandya ?#HardikPandya #INDvsSL pic.twitter.com/4EPBqTnd9l