முதல் இந்தியர் எனும் பெருமையை பெற்ற ஹர்திக் பாண்ட்யா! எதில் தெரியுமா?
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் வீரர் ஹர்திக் பாண்ட்யா சமூக வலைத்தளத்தில் புதிய சாதனை படைத்துள்ளார்.
ஹர்திக் பாண்ட்யா
சாம்பியன்ஸ் டிராபி 2025யில் இந்திய அணியின் ஹர்திக் பாண்ட்யா 99 ஓட்டங்களுடன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்திய அணி கிண்ணத்தை வென்ற பின்னர், ஹர்திக் நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இதுகுறித்த பதிவை அவர் சமூக வலைத்தள பக்கமான இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.
முதல் இந்தியர்
அவர் பதிவிட்ட 6 நிமிடங்களுக்குள் 1 மில்லியன் Likesஐ பெற்றது. அதன் பின்னர் 16 மில்லியனுக்கும் அதிகமான Likesஐயும் குவித்தது.
இதன்மூலம், அதிவேகமாக சமூக வலைதள பக்கத்தில் 1 மில்லியன் Likes பெற்ற முதல் இந்தியர் எனும் பெருமையை ஹர்திக் பாண்ட்யா (Hardik Pandya) பெற்றார்.
நியூசிலாந்துக்கு எதிரான குரூப் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா 45 ஓட்டங்கள் எடுத்தத்துடன், 1 விக்கெட்டும் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |