உலகக்கோப்பை தோல்வியால் மனமுடைந்து பதிவிட்ட ஹர்திக் பாண்ட்யா
அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்தது காயத்தை ஏற்படுத்தியதாக ஹர்திக் பாண்ட்யா பதிவிட்டுள்ளார்
பல மாதங்கள் ஆதரவு அளித்த ஊழியர்களுக்கு நன்றி - ஹர்திக் பாண்ட்யா
நம் அனைவருக்கும் இந்த தோல்வியை எடுத்துக் கொள்வது கடினம் என இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா பதிவிட்டுள்ளார்.
அடிலெய்டில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
இந்த தோல்வி ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. ரசிகர்கள் மட்டுமின்றி வீரர்கள் இதனால் மனமுடைந்துள்ளனர்.
இந்த நிலையில் இந்திய ஆல்ரவுண்டர் வீரர் ஹர்திக் பாண்ட்யா தனது சமூக வலைதள பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், 'பேரழிவு, சிதைவு, காயம். நம் அனைவருக்கும் எடுத்துக் கொள்வது கடினம்.
எனது அணியினருக்கு, நாங்கள் கட்டியெழுப்பிய பிணைப்பை நான் ரசித்தேன் - ஒவ்வொரு அடியிலும் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டோம். எங்களுக்கு அர்ப்பணிப்புடனும், பல மாதங்கள் கடின உழைப்புடனும் ஆதரவு அளித்த ஊழியர்களுக்கு நன்றி' என தெரிவித்துள்ளார்.
Devastated, gutted, hurt. Tough to take, for all of us. To my teammates, I’ve enjoyed the bond that we built - we fought for each other every step of the way. Thank you to our support staff for their endless dedication and hardwork for months on end. pic.twitter.com/HlVUC8BNq7
— hardik pandya (@hardikpandya7) November 10, 2022
ஹர்திக் பாண்டியா இந்தப் போட்டியில் 33 பந்துகளில் 63 ஓட்டங்கள் விளாசினார். இதில் 5 சிக்ஸர், 4 பவுண்டரிகள் அடங்கும். அவரது அதிரடியான அரைசதத்தினால் இந்திய அணி 168 ஓட்டங்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.