தேசிய அணியை விட பணம் கொட்டும் ஐபிஎல் தான் முக்கியமா? இந்திய நட்சத்திர வீரரிடம் எழும் கேள்வி
ஜாம்பவான் சவுரங் கங்குலியின் ஆலோசனையை ஹர்திக் பாண்டியா உதறி தள்ளியதன் மூலம் தேசிய கிரிக்கெட் அணி மீதான ஆர்வத்தை விட ஐபிஎல் மூலம் கொட்டும் பணம் தான் அவருக்கு முக்கியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிசிசிஐ தலைவரும் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி, ஹர்திக் பாண்டியாவுக்கு ஒரு அறிவுரையை கூறியிருந்தார். அதில், ஹர்திக் காயம் அடைந்து, முழுமையாக குணமடைய அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது, இதனால் அவர் நீண்ட காலம் இந்திய கிரிக்கெட்டுக்கு சேவை செய்ய முடியும்.
அதனால் அவர் தொடக்கமாக சில ரஞ்சி கோப்பையில் விளையாடுவதை விரும்புகிறேன். அவர் இன்னும் நிறைய ஓவர்கள் வீசுவார் மற்றும் அவரது உடல் வலுவடையும் என்று நான் எதிர்பார்க்கிறேன் என கூறியிருந்தார்.
ஏனெனில் சில காலமாகவே ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா பந்துவீச முடியாமல் அவதிப்பட்டு வருகிறார். ஆனால் ஹர்திக் பாண்டியா ரஞ்சி டிராபியை உதறியதன் மூலம் பண மழை ஐபில் தொடருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.
இதன்மூலம் கங்குலி ஆலோசனையை அவர் கேட்கவில்லை. மேலும் தேசிய கிரிக்கெட் அணி மீதான நாட்டமின்மையை அறிவித்துள்ளதாகவே இது பரவலாக பார்க்கப்படுகிறது.