என்னை ஓடி வர வைச்சு அவுட்டாக்கிட்டியே! ரன் அவுட் ஆனதால் நிதானம் இழந்து கத்திய பாண்டியா வீடியோ
ஐபிஎல் போட்டியில் ரன் அவுட் ஆன கடுப்பில் நிதானத்தை இழந்த ஹர்திக் பாண்டியா களத்தில் இருந்த சக வீரரிடம் கோபமடைந்த வீடியோ வெளியாகியுள்ளது.
நேற்று நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் இடையிலான போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா 18 பந்துகளில் 27 ரன்களுடன் சிறப்பாக ஆடி கொண்டிருந்தார். அவர் எதிர்முனையில் நின்றிருந்த போது டேவிட் மில்லர் பேட்டிங் ஆடினார்.
அப்போது பந்து வீக்கெட் கீப்பரிடம் செல்ல அவர் ரன் எடுக்க ஓடி வந்தார். அவர் ஓடி வந்துவிட்டாரே என்ற காரணத்தால் மறுமுனையில் இருந்த ஹர்திக் பாண்டியாவும் பேட்டிங் முனைக்கு ஓட அவர் க்ரீஸுக்குள் வருவதற்குள் விக்கெட் கீப்பட் அவுட்டாக்கினார்.
வெற்றி பெறும் நிலையில் அணி இருந்த போது தன்னை ஓடி வர சொல்லி டேவிட் மில்லர் அவுட்டாக்கி விட்டாரே என கோபமடைந்த ஹர்திக் பாண்டியா நிதானத்தை இழந்து கத்தினார். இது தொடர்பான வீடியோ வைரலாகியுள்ளது.
— Sam (@sam1998011) April 8, 2022