வலது காலில் புதிய காயம்: நியூசிலாந்து தொடரில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகல்
Hardik Pandiya New Injury and Out Of NZ Series: காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகியுள்ளார்.
ஹர்திக் பாண்டியா விலகல்
ஹர்திக் பாண்டியாவின் வலது காலில் ஏற்பட்ட புதிய காயம் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் இருந்து விலகியுள்ளார்.
புதிய காரணமாக அவர் குறைந்தது 3 வாரங்களுக்கு போட்டியில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
காயத்தினால் அவதி பட்டு வந்த ஹர்திக், மீண்டும் செப்டம்பர் 20ம் திகதி முதல் விளையாட தகுதி பெற்று இருந்தார்.

இதன் காரணமாக அக்டோபர் 6ம் திகதி நடைபெற உள்ள அவுஸ்திரேலிய A அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய A அணி சார்பாக களமிறங்க தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது மற்றும் 2 வாரங்கள் முழுமையான ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.