கடைசி நேரத்தில் தான் செய்வீங்களா! இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா அதிருப்தி
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி போராடி வெற்றி பெற்ற நிலையில் மைதானம் குறித்து ஹர்திக் பாண்ட்யா அதிருப்தி தெரிவித்துள்ளார்.
போராடி ஜெயித்த இந்தியா
இந்தியா - நியூசிலாந்து இடையிலான 2வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 99 ரன் எடுத்தது. இதனால் இந்தியாவுக்கு 100 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த எளிய இலக்கை இந்தியா போராடி தான் தொட்டது.
அதன்படி ஒரு பந்து எஞ்சி இருந்த நிலையில் தான் இந்த வெற்றியை பெற முடிந்தது. இந்த நிலையில் லக்னோ ஆடுகளம் குறித்து கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா அதிருப்தி தெரிவித்து உள்ளார்.
AP
கடைசி நேரத்தில்...
அவர் கூறுகையில், உண்மையை சொல்ல போனால் இந்த ஆடுகளம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரு அணி வீரர்களுமே பிட்ச் குறித்து அதிருப்தியை வெளியிட்டனர்.
20 ஓவர் போட்டிக்கு ஏற்ற ஆடுகளம் இதுவல்ல
கடைசி நேரத்தில் பிட்ச்களை தயார் செய்தால் இது போன்று தான் இருக்கும். எனவே முன் கூட்டியே தயார்படுத்தி இருக்க வேண்டும் என்றார்.