என்னுடைய புத்தாண்டு தீர்மானம் இதுவே…இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா அறிவிப்பு
உலகக் கோப்பை போட்டியை வெல்வதே எனது புத்தாண்டு தீர்மானம் என இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி
இந்த ஆண்டின் இறுதியில் தொடங்கவுள்ள ஒருநாள் உலக கோப்பை போட்டிகளுக்காக இந்திய கிரிக்கெட் அணி தீவிரமாக தயாராகி வரும் நிலையில், தலா 3 போட்டிகள் கொண்ட டி 20 கிரிக்கெட், ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
டி20 போட்டிகளில் விராட் கோலி, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டு இந்திய கிரிக்கெட் அணியின் முழு நேர கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.
New challenge, new energy ? pic.twitter.com/OUayi3C3vA
— hardik pandya (@hardikpandya7) November 17, 2022
இது வரவிருக்கும் 2024 டி-20 உலக கோப்பையை கருத்தில் கொண்டு ஹர்திக் பாண்டியா தலைமையில் வலுவான அணியை உருவாக்க மேற்கொள்ளப்படும் திட்டமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக உயர்ந்து இருக்கும் ஹர்திக் பாண்டியா தனது புத்தாண்டு தீர்மானம் குறித்து வெளிப்படுத்தியுள்ளார்.
அதில் 50 ஓவர் உலகக் கோப்பையை வெல்வதே என்னுடைய மிகப்பெரிய புத்தாண்டு தீர்மானம் என தெரிவித்துள்ளார்.
இது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை வழங்கியுள்ளது.
இதற்கிடையில் பாண்டியா தலைமையில் இந்திய அணி இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியை மும்பையின் வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு எதிர்கொள்ள உள்ளது.
அணிகளின் விவரம்
இந்திய அணி: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுவேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷால் படேல், உம்ரன் மாலிக், ஷிவம் மாவி, முகேஷ் குமார்.
இலங்கை அணி: தசன் ஷனகா (கேப்டன்), வனிந்து ஹசரங்கா டி சில்வா, ஷாரித் அசலங்கா, பனுகா ராஜபக்ச, அஷேன் பண்டாரா, தனஞ்ஜெயா டி சில்வா, அவிஷ்கா பெர்னாண்டோ, ஷமிகா கருணாரத்னே, லகிரு குமரா, தில்ஷன் மதுஷங்கா, குசால் மெண்டிஸ், பதும் நிசங்கா, பிரமோத் மதுஷன், கசன் ரஜிதா, சதீரா சமரவிக்ரமா, மகீஷ் தீக்சனா, நூவன் துஷாரா, துனித் வெல்லலகே.