ஷமியால் தான் நான் அப்படி அடிச்சேன்! பஞ்சாப்பை கதறவிட்ட ஹார்திக் பாண்ட்யா சொன்ன காரணம்
பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத்தில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹார்திக் பாண்ட்யா, அதற்கு ஷமி தான் காரணம் என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத்தில், மும்பை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இப்போட்டியின் கடைசி கட்டத்தில், மும்பை அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஹார்திக் பாண்ட்யா 30 பந்தில் 40 ஓட்டங்கள் குவித்து அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார்.
ஆரம்பத்தில், இப்போட்டியில் திணறி வந்த இவர் திடீரென்று ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இது குறித்து போட்டி முடிந்த பின்பு ஹார்திக் பாண்ட்யா இது குறித்து கூறுகையில், இப்போட்டியில் முகமது ஷமி சிறப்பான வீசினார்.
அவர் வீசின ஓவரின் பவுன்சர் பந்து என்னை தாக்கியது. அப்போது தான் நான் இன்னும் சிறப்பாக பேட்டிங் செய்ய வேண்டும் என்று உணர்ந்தேன். அதன் பின்னர் என்னுடன் பேட்டிங் செய்து கொண்டிருந்த பொல்லார்டிடம் சென்று இந்த பந்து என்னை தட்டி எழுப்பியுள்ளது.
நிச்சயம் நான் என்னுடைய பேட்டிங்கை சிறப்பாக செயல்படுத்துவேன் என்று கூறினேன். அதற்கு முன்னர் வரை பந்து பேட்டில் படவே சற்று சிரமமாக இருந்தது.
என்னால் பந்தினை சரியாக கனெக்ட் செய்ய முடியவில்லை.
ஆனால் ஷமி வீசிய பந்து தாக்கியதற்கு பின்னர் நான் நிச்சயம் பந்துகளை அடிக்க வேண்டும் என்பதில் நூறு சதவீதம் உறுதியாக இருந்தேன்.
எனவே அடுத்தடுத்த பந்துகளில் என்னால் விளாசவும் முடிந்தது என்று கூறியுள்ளார்.