வெங்கடேஷ் ஐயருக்கு ஆப்பு வைத்த ஹர்திக் பாண்ட்யா - இனி அவ்வளவு தான்..!
2022ம் ஆண்டு ஐபிஎல் தொடர் மூலம் ஹர்திக் பாண்ட்யா தான் செயல்படுத்தவுள்ள திட்டம் குறித்து வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் இருந்தும், அடுத்ததாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து கழட்டி விடப்பட்ட ஹர்திக் பாண்ட்யாவுக்கு தற்போது மீண்டும் நல்ல நேரம் தொடங்கியுள்ளது என்றே சொல்லலாம். ஆம். இந்தாண்டு ஐபிஎல் தொடரில் புதிதாக வந்துள்ள அகமதாபாத் அணி ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக நியமித்துள்ளது.
கடந்த 2 சீசன்களாக ஒரு ஓவரை கூட வீசாமல் இருந்த பாண்ட்யாவின் மீது அகமதாபாத் அணி அதீத நம்பிக்கை வைத்துள்ளது. ஆனால் இந்திய அணியோ இவரை நம்பாமல் பதிலுக்கு வெங்கடேஷ் ஐயர் மீது நம்பிக்கையை வீசியுள்ளது.
இந்நிலையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடர் குறித்து பேசிய பாண்ட்யா, நான் முழுமையான ஆல்ரவுண்டராக தயாராகிவிட்டேன். வரும் ஐபிஎல் தொடரில் தான் எனக்கு திருப்புமுனை. எனது பயிற்சிகள், திட்டங்கள் அனைத்தும் உலகக்கோப்பையை மனதில் வைத்து மட்டுமே உள்ளது. என் நாட்டிற்காக உலகக்கோப்பையை வென்றுத்தர விரும்புகிறேன். அதற்காக தான் இவ்வளவு கடின உழைப்பை போட்டுள்ளேன். ஐபிஎல் தொடர் எனக்கு சிறந்த பயிற்சியாக இருக்கப்போகிறது எனக்கூறியுள்ளார்.
இந்திய அணியில் இடம்பிடிக்க எப்போதும் அவசர அவசரமாக தயாராவேன். ஆனால் இந்த முறை மிகவும் நிதானமாக மனதிற்கு ஓய்வு கொடுத்து, குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டிருக்கிறேன். பயோ பபுள் வாழ்க்கை மிகவும் கடினமானது. அதெல்லாம் தாண்டி தற்போது முழு மன உறுதி, உடல் உறுதியுடன் இந்திய அணியில் இடம் பிடிப்பேன் என்று பாண்ட்யா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஒருவேளை பாண்ட்யா அணிக்குள் வந்தால் இங்கு நிச்சயம் யாரை தேர்வு செய்வது என்ற குழப்பம் ஏற்படும் என்பதே உண்மை. பொறுத்திருந்து பார்க்கலாம்.