கணுக்காலில் அறுவை சிகிச்சை! இந்தியாவின் அடுத்தடுத்த தொடர்களில் விலகுகிறாரா ஹர்திக் பாண்டியா?
கணுக்கால் காயம் காரணமாக இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் அடுத்தடுத்த தொடர்களில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக கோப்பை இருந்து விலகல்
இந்தியாவில் வைத்து சிறப்பாக நடைபெற்று வரும் 13வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்த தொடரில் வங்கதேச அணியுடனான போட்டியின் போது ஹர்திக் பாண்டியாவிற்கு இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது, பின் உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேறிய பாண்டியா சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார்.
காயம் சற்று தீவிரமாக இருந்ததால் இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்டியா உலக கோப்பை தொடரில் இருந்தே விலகினார்.
அடுத்தடுத்து தொடர்களில் இருந்து விலகல்?
இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவின் கணுக்கால் காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமா? இல்லையா? என்பதை மருத்துவர்கள் குழு இன்னும் முடிவெடுக்கவில்லை என தெரிகிறது.
ஏற்கனவே உலக கோப்பை தொடரில் இருந்து காயம் காரணமாக விலகிய ஹர்திக் பாண்டியா, இதனை தொடர்ந்து தற்போது அவுஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடர்களில் இருந்தும் விலகும் நிலை ஏற்படலாம் என தெரியவந்துள்ளது.
எப்படி இருப்பினும் ஹர்திக் பாண்டியா குறைந்தது 2 மாதங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |