அவருக்கு பீல்டிங் அமைப்பது கடினமான காரியம்: தோல்வி குறித்து பேசிய ஹர்திக் பாண்ட்யா
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக தோல்வியடைந்து குறித்து குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மனம் திறந்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் வெற்றி
வான்கடே மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் மும்பை அணியின் வீரர் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக சதம் விளாசினார். இந்த நிலையில் தோல்வி குறித்து ஹர்திக் பாண்ட்யா பேசியுள்ளார்.
ஹர்திக் பாண்ட்யா கூறிய காரணம்
அவர் கூறுகையில், 'எங்கள் அணியில் ரஷீத் கான் சிறப்பாக செயல்பட்டார். எனினும் இந்த தோல்வியால் அணியில் பெரிதாக மாற்றம் செய்ய தேவையில்லை என நினைக்கிறேன். நாங்கள் 25 ஓட்டங்கள் கூடுதலாக விட்டுக்கொடுத்து விட்டோம்.
சூர்யகுமார் யாதவ் குறித்து போதுமான அளவு பேசிவிட்டனர். அவர் 20 ஓவர் போட்டியில் மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவர். அவருக்கு பீல்டிங் அமைப்பது என்பது கடினமான காரியம் ஆகும். அவருக்கு எதிராக நீங்கள் திட்டத்தை சரியாக அமுல்படுத்தவில்லை என்றால் என்ன நடக்கும் என்பதை நிரூபித்து காட்டினார்' என தெரிவித்துள்ளார்.
BCCI/IPL