எது நடந்தாலும் பரவாயில்லை.. அதுதான் என் லட்சியம்! ஹர்திக் பாண்ட்யா
இந்தியாவுக்காக உலகக்கோப்பையை வெல்வதே தனது லட்சியம் என ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.
ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, 2022ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்றது. சிறப்பான ஆல் ரவுண்டர் வீரராகவும், கேப்டனாகவும் செயல்பட்ட ஹர்திக் பாண்ட்யாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆண்களுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இதுகுறித்து பேசிய ஹர்திக் பாண்ட்யா, தன் நாட்டிற்காக உலகக்கோப்பையை வென்று தருவதே தனது லட்சியம் எனது தெரிவித்தார்.
Photo Credit: BCCI/IPL
அவர் கூறுகையில், 'என்ன நடந்தாலும் பரவாயில்லை, இந்தியாவுக்காக உலகக்கோப்பையை வெல்ல வேண்டும். நான் எப்போதும் அணிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒருவனாக இருப்பதால், என்னிடம் உள்ள அனைத்தையும் கொடுக்க போகிறேன். ஆகவே, என்னைப் பொறுத்தவரை இலக்கு எளிதாக இருக்கும்.
இந்திய அணிக்காக விளையாடுவது என்பது கனவு நனவாகும் தருணம், ஆகவே எத்தனை முறை அல்லது எத்தனை போட்டிகள் நான் விளையாடியுள்ளேன் என்பது குறித்து கவலைப்படவில்லை. ஒரு இந்தியனின் பார்வையில் தூய அன்பையும், ஆதரவரையும் பெற்றுள்ளேன். எனது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். நீண்ட கால அளவோ, குறுகிய கால அளவோ லட்சியம் ஒன்றுதான். எது நடந்தாலும் சரி, நான் உலகக்கோப்பையை வென்றாக வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பையில் விளையாடும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள ஹர்திக், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 487 ஓட்டங்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Photo Credit: Twitter