இலங்கைக்கு எதிரான டி20 தொடர்! இந்திய அணி கேப்டனாக ரோகித்துக்கு பதில் இவரா?
இலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இந்திய அணி கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம்
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் 20 ஓவர் போட்டி வருகிற ஜனவரி 3ஆம் திகதி நடக்கிறது.
இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா வங்காள தேசத்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரின்போது இடது கை விரலில் காயம் அடைந்தார். அவர் காயத்தில் இருந்து குணமடைய சில நாட்கள் ஆகலாம் என்று தெரிகிறது.
ஹர்திக் பாண்ட்யா
இதனால் இலங்கைக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் இந்திய அணிக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி கூறுகையில், கிரிக்கெட் வாரிய கூட்டத்தில் இந்தியாவின் டி20 அணி கேப்டன் பற்றி விவாதிக்கப்படவில்லை. தேர்வுக்குழு மட்டுமே கேப்டன் பதவி பற்றி முடிவு எடுக்க முடியும் என கூறினார்.
இது தொடர்பிலான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.