ஸ்டெம்பில் இருந்து விலகி சிக்சர்களை விளாசிய ஹர்திக் பாண்டியா! கலங்கி நின்ற எதிரணியினர் வீடியோ
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5வது டி20 போட்டியில் ஹர்திக் பாண்டியா விளாசிய சிக்சர்கள், பவுண்டரிகள் வீடியோ வைரலாகியுள்ளது.
இதில் இந்தியா 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 4 - 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இப்போட்டியில் இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா 16 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார்.
இதில் தலா 2 சிக்சர்கள், பவுண்டரிகள் அடக்கமாகும். அதிலும் அவர் அடித்த இரண்டு சிக்சர்களும் எளிதான ஷாட்கள் கிடையாது. ஒரு சிக்சரை பவுலருக்கு நேர் திசையில் உயரத்தில் பறக்கவிட்டார் ஹர்திக் பாண்டியா. அடுத்த சிக்சரை ஸ்டெம்பில் இருந்து விலகி நின்று இடுப்புக்கு வந்த புல்டாஸ் பந்தை லெக் திசை நோக்கி விளாசினார்.
அதே போலவே இரண்டு பவுண்டரிகளையும் வித்தியாசமான ஷாட்டாக அடித்து எதிரணிக்கு கிலியை ஏற்படுத்தினார் பாண்டியா.
.@hardikpandya7 in action as he goes hard on @Jaseholder98.
— FanCode (@FanCode) August 7, 2022
Watch all the action from the India tour of West Indies LIVE, only on #FanCode ? https://t.co/RCdQk12YsM@BCCI @windiescricket
#WIvIND #INDvsWIonFanCode #INDvsWI pic.twitter.com/a6tTF3MnA8